களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய தம்பதியினர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை, கிதுலாவ பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த தம்பதி, சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு பொருத்தமற்ற ஆடைகளை அணிந்திருந்தமை தெரியவந்துள்ளது.
தம்பதியின் செயல்
அப்போது, நீதிமன்றத்தின் பிரதான வாயிலில் கடமையாற்றிய கான்ஸ்டபிள் ஒருவர் குறித்த சந்தேகநபருக்கு அறிவித்ததையடுத்து, தம்பதியினர் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான கான்ஸ்டபிள் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.