கிரியுல்ல – கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் பிக்கு ஒருவர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீடொன்றிற்குள் ஒருவர் காயமடைந்து இருப்பதாக கிரியுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காயமடைந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பிக்கு தலைமறைவு
காயமடைந்தவர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கல்கொடவத்தை, மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சந்தேக நபரான பிக்கு உயிரிழந்தவரின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிக்கு விகாரை ஒன்றில் வசிக்காமல் மாரவில பிரதேசத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற பின்னர் பிக்கு தப்பிச் சென்றுள்தாக தெரிவித்த கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.