புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பானது, இன்றைய தினம் (08.06.2024) விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் செயலாளராக எச்.எம்.பி.பி ஹேரத் (H.M.P.B Herath) நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு
அதேவேளை, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சோமரத்ன விதானபத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த வர்த்தமானி அறிவிப்பானது, ஜனாதிபதி செயலாளர் இ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்கவின் உத்தியோகபூர்வ (E.M.S.B. Ekanayake) கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.