முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி(Indira Gandhi) கொல்லப்பட்டது தொடர்பான சுவரொட்டிகளை வெளியிட்டு, காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினர், கனடாவில்(Canada) வாழும் இந்திய வம்சாவளியினருக்கு அச்சத்தை ஏற்படுத்த முயல்வதாக இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் வான்கூவரில், காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளர்கள், முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி கொல்லப்பட்டது தொடர்பான போஸ்டர்களை ஒட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விஷயம் கனேடிய மற்றும் இந்திய அரசியல் வட்டாரங்களில் ஒரு முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்திரா காந்தியின் மரணம்
சுவரொட்டிகளில் முன்னாள் பிரதமரின் உடம்பில் துப்பாக்கி குண்டுகள் மற்றும் அவரது சீக்கிய பாதுகாவலர்கள் துப்பாக்கி ஏந்தியபடி கொலையாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
அது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சரான Dominic LeBlanc, வன்முறையைத் தூண்டுதல் கனடாவில் ஏற்றுகொள்ள இயலாதது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்திய(india) வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரா ஆர்யாவும் (Chandra Arya), இந்த சுவரொட்டிகள் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார்.
சுவரொட்டியால் அச்சுறுத்தல்
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள அந்த சுவரொட்டிகள் கனடாவில் வாழும் இந்து கனேடியர்களுக்கு வன்முறை குறித்த அச்சத்தை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
Khalistan supporters in Vancouver with posters, of Hindu Indian prime minister Indira Gandhi body with bullet holes with her bodyguards turned assassins holding their guns, are again attempting to instil fear of violence in Hindu-Canadians.
This is continuation of threats with a… pic.twitter.com/ia8WQL4VtH— Chandra Arya (@AryaCanada) June 8, 2024
இந்த நடப்பு நிகழ்வுகள் கனடாவில் உள்ள சமூகங்களுக்குள்ளும் நாடுகளுக்கிடையேயும் பதட்டங்களையும் கவலையையும் தூண்டியுள்ளதைாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
This week, there were reports of imagery depicting the assassination of Indian Prime Minister Indira Gandhi in Vancouver. The promotion of violence is never acceptable in Canada.
— Dominic LeBlanc (@DLeBlancNB) June 7, 2024