நடிகர் பிரேம்ஜிக்கு 45 வயதில் திருமணம் நடைபெற இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
நீண்ட காலத்திற்கு பின்னர் எங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி என வெங்கட் பிரபுவும் அதை உறுதி செய்திருந்தார்.
நாளை திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் தற்போது பிரேம்ஜி திருமண கோலத்தில் இருக்கும் போட்டோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.