பாக்கியாவிற்கு இணையாக கோபி தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், தற்போது பாக்கியா – கோபியின் கதை முடிந்து ராதிகா – கோபியின் கதை ஆரம்பமாகியுள்ளது.
தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை வைத்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் கோபி இறங்கியுள்ளார். இதற்கு செழியன் மற்றும் எழில் இருவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாக்கியாவிற்கு இணையாக கலத்தில் இறங்கிய கோபி
இந்த நிலையில் தற்போது மனைவி, அம்மா இருவரையும் ஒரே வீட்டில் வைத்து கொண்டு கோபி மண்டையை பிய்த்து கொள்கிறார்.
ஈஸ்வரிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது முதல் கோபி அவருடைய அம்மா மீது அதிக அக்கறை காட்டி வருகிறார். ஈஸ்வரி கிச்சனையும் சமாளித்து கொண்டு வீட்டையும் சமாளித்து கொண்டு பாக்கியா எப்படி இவ்வளவு வேலைச் செய்கிறார்? என கோபிக்கே சந்தேகம் வந்து விட்டது.
நானும் அவள் போல் உழைக்க வேண்டும் என இரவும் பகலும் நடையாய் நடந்து வேலைப்பார்க்கிறார்.
கோபியின் இந்த செயலை பார்த்து ராதிகாவும் அவருடைய அம்மாவும் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.