பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (11) காலை 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் விடுதியில் தனியாக இருந்ததாகவும், அவர் அந்த இடத்தை கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.