ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (12) நடைபெறவிருந்த இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
20 அணிகள் கலந்து கொண்டுள்ள ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
இலங்கை – நேபாளம் அணிகள்
இந்த தொடரில் இன்று 23வது லீக் போட்டியில் ஆசிய அணிகளான இலங்கை – நேபாளம் அணிகள் மோதவிருந்தன.
இந்த தொடரில் இதுவரை நேபாள அணி 1 லீக் போட்டியில் விளையாடி தோல்வியும், இலங்கை அணி 2 லீக் போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியும் கண்டுள்ளன.
இந்நிலையில், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டடுள்ளது.