வடமேல் மாகாணத்தின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (11) இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.
மாகாணத்தில் வழங்கப்படும் ஆசிரியர் நியமனங்கள் மட்டுமன்றி, சிற்றூழியர் நியமனங்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களின்போதும், குறித்த நியமனங்களைப்பெறுவோர் சிக்கல்கள் இன்றி சேவையாற்றுவதற்கான வகையில் அவர்களுக்கான நியமனங்களை வழங்குமாறும் ஆளுநர் நசீர் அஹ்மட் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.