இணையத்தில் வயது குறைந்த இலங்கையர்களை உள்ளடக்கிய ஆபாச காணொளிகள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இணையதளத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி தினசரி இந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை காவல்துறையினர் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த மூத்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில், “இதுபோன்ற வழக்குகள் பற்றி தொடர்ந்து புகாரளிக்கப்படுவதுடன் காவல்துறை நீதிமன்றங்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது அத்தோடு சில வழக்குகள் மேலதிக ஆலோசனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது
குற்றவியல் தண்டனை
இத்தகைய உள்ளடக்கத்தின் தோற்றத்தைக் கண்டறிவதற்கான நவீன தொழில்நுட்பமொன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல எங்களிடமும் ஒரு தரவுத்தளம் உள்ளது.
உலகில் வேறு இடங்களில் இதுபோன்ற வழக்குகள் கண்டறியப்பட்டவுடன் தரவுத்தளம் புதுப்பிக்கப்படும் அத்தோடு தொலைபேசிகளில் உள்ள வசதியைப் பயன்படுத்தி அத்தகைய உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொண்டவுடன் உள்ளடக்கம் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பமும் உள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்
அதற்கேற்ப எங்கள் தரவுத்தளத்தில் தகவல்களைப் புதுப்பிக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் தகாத முறைக்கு உட்படுத்தப்படும் அனைத்து விதமான துன்புறுத்தல்களுக்கு எதிராக குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனடிப்படையில், சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட வரைவு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.