ரி20 உலகக் கிண்ணப்போட்டித் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேற்றப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியொன்றில் பங்களாதேஷ் அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது.
பங்களாதேஷ் அணி நெதர்லாந்து அணியை 25 ஓட்டங்களினால் வீழ்த்தியிருந்தது.
பங்களாதேஷ் நெதர்லாந்து போட்டியில் முடிவு எட்டப்பட்டால் இலங்கை முதல் சுற்றிலேயே வெளியேற நேரிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு
அதன்படி இந்தப் போட்டியில் பங்களாதேஷ் வெற்றியீட்டியதனைத் தொடர்ந்து இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்துள்ளது.
எவ்வாறெனினும் எதிர்வரும் 17ம் திகதி இலங்கை அணி நெதர்லாந்து அணியுடன் மற்றுமோரு முதல் சுற்றுப் போட்டியில் போட்டியிட உள்ளது.
இந்தப் போட்டியின் முடிவு எதுவாக இருந்தாலும் இலங்கையினால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக் காலமாக உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களில் மிக மோசமான முறையில் விளையாடி வருவதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.