அடுத்த ஆண்டு (2025) வருவாய் இலக்கை அடைய உதவும் முக்கிய வருவாய் முறை சொத்து அடிப்படையிலான சொத்து வரி என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாடகை வருமான வரி குறித்து நிதி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வரி விதிப்பில் கவனம் செலுத்துவது சராசரி வருமானம் ஈட்டுபவர்கள் மீது அல்ல, அதிக சொத்து உள்ளவர்கள் மீதுதான் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிக மதிப்புள்ள சொத்துக்கள்
சமூகத்தின் செல்வந்தர்களுக்கு சொந்தமான அதிக மதிப்புள்ள சொத்துக்கள் அல்லது சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பொருத்தமான வரி விலக்கு வரம்புகளை விதிப்பதன் மூலம் இந்த நோக்கங்கள் அடையப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% மற்றும் 2026 ஆம் ஆண்டு முழுவதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4% வருமானம் இந்த வரி மூலம் எதிர்பார்க்கப்படுகிறது என்பது இந்த குறிப்பிட்ட இலக்குகளுக்கு சான்றாகும் என கூறப்பட்டுள்ளது.