பேலியகொட (Peliyagoda) பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பின்புறம் களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று (17) மாலை மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இறந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 05 அடி 06 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் (Colombo National Hospital) பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பேலியகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.