மாத்தளை பகுதியில் தனது 70 வயதான தந்தையை கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் மகள் நாவுல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் அரங்கல, கனுமுலய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் தந்தை நாவுல பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண், ஆண்ணொருவருடன் வீட்டுக்கு வந்து தங்க முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, சந்தேகநபரான பெண் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான, பெண்ணை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவுல பதில் நீதவான் ஷியாமலி விஜேரத்ன உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.