கிளிநொச்சி தருமபுரம் பிரதேசத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.