பாணந்துறை நகரத்திலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றை உடைத்து 26 இலட்சம் ரூபா பெறுமதியான ஆடைகளைத் திருடிய தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 37 வயதுடைய தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தம்பதியினர் ஆடை விற்பனை நிலையத்தின் பின்புறத்தில் உள்ள ஜன்னலை உடைத்து உள்நுழைந்து திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினரை பாணந்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேர்ற்கொண்டு வருகின்றனர்.