பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் மதுரை முத்து குறித்து சில உண்மைகளை கூறியுள்ளார்.
மதுரை முத்து செய்த உதவி
பிரபல நடிகருக்கு மதுரை முத்து செய்த உதவி தற்போது ரசிகர்களுக்கு தெரியவந்த நிலையில், ஆச்சரியமடைந்துள்ளனர்.
சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் பழனியப்பன் மதுரை முத்து செய்த உதவி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பிரபல ரிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையின் காரணமாக புகழின் உச்சத்திற்கு வந்தவர் தான் மதுரை முத்து. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பழனியப்பன் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனுக்கு நண்பனாக நடித்து வருகின்றார்.
இவர் புகைப்படங்கள் காணொளிகள் இவற்றினை வெளியிட்டு வரும் இவர், நடிகர் பாபாலட்சுமணன் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மதுரை முத்து உதவி செய்துள்ளதையும் கூறியுள்ளார்.
சுமார் ஐந்தாயிரம் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை சாமான்கள் வாங்கி கொடுத்து உதவியுள்ளார். இதனை சிறகடிக்க ஆசை செல்வம் கூறியுள்ளார்.
சமீபத்தில் மனைவியை விவாகரத்து செய்கின்றார் என்று பல சர்ச்சைகளில் இருக்கும் இவர், தற்போது இவ்வாறு செய்துள்ளதை அறிந்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.