யாழ்ப்பாணம் நெடுந்தீவு இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களும் இன்று அதிகாலை(24) யாழ் பிராந்திய குற்ற தடுப்ப பிரிவுனரால் நெடுந்தீவில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த புதன்கிழமை நெடுந்தீவு 7ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞன்தாக்குதலுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
சடலத்துடன் போராட்டம்
சம்பவத்துடன் நான்கு சந்தேகநபர்கள் தொடர்புபட்ட நிலையில் , ஒருவர் நெடுந்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் மூவர் தலைமறைவாகியிருந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாகியிருந்த மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்ய கோரி கிராம மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் தீவிரவிசாரணைகளி மேற்கொண்ட பொலிஸார் , நெடுந்தீவில் பற்றைக் காடுகளுக்குள் பதுங்கியிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு படகு மூலம் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்கள் விசாரணைகளுக்கு பின்னர் நால்வரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.