முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட கொடுப்பனவு இவ்வாரம் முதல் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற மக்களுக்கான புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், எதிர்வரும் சில வருடங்களில் பல புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.