கடந்த 24 நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் கடத்தப்பட்ட நபரொருவர் சித்திரவதைக்குள்ளான நிலையில் இன்று (26) பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த 2ஆம் திகதி கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இந் நிலையில், தன்னை அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று தஞ்சமடைந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்து சித்திரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்த அவர், குறித்த கும்பல் தன்னை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரை அடைத்து வைத்திருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்ற பொலிஸார் அங்கு சாட்சியங்களைப் பதிவு செய்ததுடன், தடயவியல் சான்றுகளையும் பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கடத்தப்பட்ட நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.