முல்லைத்தீவு மாங்குளம் ஏ9 வீதியில் நேற்று முன்தினம் (25) விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இந்த கோரவிபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் பேருந்து சாரதியான 38 வயதான குணசீலன் லோகேஸ்வரன், மற்றும் சின்னத்தம்பி விசயரத்தினம், பாலசுப்பிரமணியம் பார்த்தீபன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்புக்கு பயணித்த சொகுசு பேருந்து
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து, முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது சொகுசு பேருந்துடன் பாரஊர்தி ஒன்று மோதி விபத்து இடம்பெற்ற நிலையில் இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.