ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், புதிய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.