இந்தியாவில் பீகார் மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர், திருமணத்திற்கு மறுத்ததால் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவருக்குமிடையில் , கடந்த 5 ஆண்டுகளாக காதல் தொடர்பு இருந்துவந்த நிலையில் காதலன் திருமணத்திற்கு மறுத்துள்ளார். அதன் , பின்னர் பதிவுத் திருமணத்திற்கு காதலன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்
அதன்படி, காதலி திருமணத்திற்காக ஏற்பாடுகளை செய்த போதும் காதலன் திருமணத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண் , காதலனை தனது வீட்டிற்கு வரவழைத்து அங்கு வைத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார்.
இதனால் வலியால் துடித்த காதலனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார் காதலியான 25 வயது பயிற்சி மருத்துவரை கைது செய்துள்ளனர்.
மேலும் வெட்டப்பட்ட காதலன் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.