மொனராகலை பிரதேசத்தில் விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.
பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுல்லகம்மன பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
பிபில பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை (2) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரும் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.