எல்ல பல்லேவெல நீர்வீழ்ச்சியிலிருந்து புகைப்படமெடுக்க முயற்சித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நீர்வீழ்ச்சியின் உயரத்திலிருந்த வண்ணம் புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பத்தில் சுமார் 200 அடி பள்ளத்தில் அவர் வீழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
19 வயதுடைய பிரான்ஸ்(france) நாட்டைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்தவராவார்.
காதலியுடன் சுற்றுலா
கடந்த மாதம் 25ம் திகதி அவர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்தார். தனது காதலியுடன் நாட்டிற்கு வந்த அவர் எல்ல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயணித்துள்ளார்.
மேலும் சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பல்லேவெல நீர்வீழ்ச்சிக்கு இளைஞன் சென்றுள்ளார்.
பதுளை போதனா வைத்தியசாலையில் உயிர் பிரிந்தது
அவர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.