சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரச்சினைக்கு முன்னர் வைத்தியர் அர்ச்சுனாவை அங்கு பலர் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். அங்கு நடந்த பிரச்சினைகளின் உண்மைத் தன்மையை வெளிப்படையாக மக்களுக்கு அவர் கூறியதன் பின்னர் தான் மக்களிடம் அவருக்கு அதிக செல்வாக்கு உண்டானது என்று பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்தார்.
மேலும், உண்மைகளுக்கு எப்போதுமே மக்களிடத்தில் வரவேற்பு இருக்கும் என்றும் அவர் கூறினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலையில் இருக்கும் இப்படியான பிரச்சினைகள் பொதுமக்களின் பார்வைக்கு இதுவரை வெளிப்படாமை தொடர்பிலும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் கேள்வி எழுப்பினார்.