கொழும்பு (Colombo) – மொரட்டுவ (Moratuwa) காவல்துறை பிரிவிற்குட்பட்ட, லக்ஷபதி ரதுகுருசவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலை சம்பவம் இன்று (15) அதிகாலை பதிவாகியுள்ளது.
ஹரேந்திர குமார் என்ற 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இறந்தவர் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், மனைவி தனது சகோதரனை வீட்டிற்கு வரவழைத்து அவரது உதவியுடன் கூரிய ஆயுதத்தால் கணவரை கொலை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் மனைவி மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.