முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உட்பட இருவர் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருள்
சம்பவத்தில் பொரள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரும் பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஆணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 80 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருட்கள் வெளிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவருமான “ரஜமல்வத்த சாமர” என்பவருக்குச் சொந்தமானது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.