சென்னையில் இன்றைய தினம் (17) தங்கம்விலையானது வரலாறு காணத்தை உச்சத்தை எட்டியுள்ளமை நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்தவகையில் நேற்று ஜூலை 16ஆம் திகதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்த விலை
இந்நிலையில் இன்று ( 17) 22 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.90 உயர்ந்து ரூ.6920க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.55,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.74 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5669க்கும், சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45352க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100.50க்கும் ஒரு கிலோ ரூ.1,00,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.