முல்லைத்தீவு – முள்ளியவளை 3ஆம் வட்டாரப்பகுதியில் உள்ள வீடு ஒன்று உடைக்கப்பட்டு பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளை சம்பவம் நேற்று (16.07.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
முள்ளியவளை 3ஆம் வட்டராப்பகுதியில் வசித்து வந்த அரச உத்தியோக குடும்பத்தின் வீட்டிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 17 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.