மருத்துவ நிர்வாக துறையில் இருந்து பதவி விலகுவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தினை அவர் தனது சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Patirana) சற்றுமுன்னர் யாழில் அறிவித்துள்ளார்.
கறை படிந்த முறைமை
சுகாதார அமைச்சரின் அறிவித்தல் வெளியாகி சில மணி நேரங்களிலேயே வைத்தியர் அர்ச்சுனா தனது சமூகவலைத்தள பதிவில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் கூறுகையில், “இன்றிலிருந்து இந்த கறை படிந்த முறைமையில் மருத்துவ நிர்வாகியாக வேலை செய்ய மாட்டேன்.
அதேவேளை, உங்கள் வைத்தியசாலைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை ஒரு அரசியல்வாதியிடம் தெரிவியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தகவலை மேலும் உறுதிப்படுத்துவதற்கு வைத்தியர் அர்ச்சுனாவிற்கு அழைப்பை ஏற்படுத்திய போதும் தொடர்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.