அண்மையில் இலங்கையில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசத்திலும் பெரும் பேசுபொருளான யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவமனையில் நிர்வாக சீர்கேடு குறித்து மற்றுமொரு தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
யாழ் சாவகச்சேரி மருத்துவமனியில் குறைபாடுகளை சுட்டிக்காட்டி மருத்துவர் இராமநாதன் அருச்சுனா பதவியில் உள்ள சிலரின் கடும் பிரயத்தனங்களின் பின் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
ராஜீவ் Sir கவனத்திற்கு….
மருத்துவர் அருச்சுனாவின் வெளியேற்றத்தின் பின்னர் சவகச்சேரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தாம் திறம்பட மருத்துவ சேவைக:ளை வழங்கி வருவதாக புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் திருநீல கண்டன் கடிக்கு உள்ளான தனது தந்தையை சவகச்சேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கு யாரும் பணியில் இருக்கவில்லை என பாதிக்கப்பட்டவரின் மகன் முகநூலில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,
வைத்தியர் ரஜீவ் அவர்களின் கவனத்திற்கு மன்னிக்கவும் ராஜீவ் Sir கவனத்திற்கு,
நேற்று இரவு 12.40 திருநீல கண்டன் கடிக்கு இலக்காகிய எனது தந்தையை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அங்கு யாரும் இல்லை புதிதாக இருக்கும் opt க்கு சென்றோம் அங்கும் யாரும் இல்லை. பின்னர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் அறைக்கு சென்று பார்த்தோம்.
அங்கும் யாரும் இல்லை அதன் பின் தற்போது யாழ்ப்பாண போதான வைத்திய சாலைக்கு கொண்டு சென்று A&E இல் அனுமதிக்க பட்டுள்ளார் . நேற்று இரவு cctv ஐ பார்க்கவும் சாவகச்சேரி வைத்திய சாலை நிர்வாகம் என குறிப்பிட்டுள்ளார்.