மின் கட்டணம், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை குறைப்பின் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடைகின்றதா என்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ரி.ஐ உடுவர இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களிடம் இருந்து கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.