யாழ்ப்பாணம் – மூளாய் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணியாளர்களின் நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின், கடமை நேரத்தில் அவர்களின் உடமைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக அறை ஒன்றினுள் 09 பெட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்நிலையில் வழமை போன்று நேற்றைய தினமும் பணியாளர்கள் தமது உடமைகளை பெட்டகத்தினுள் வைத்து பூட்டி விட்டு , கடமைகளுக்கு சென்றதாக கூறப்படுகின்றது.
கடமை முடிந்து வந்து பார்த்த வேளை பெட்டகங்கள் உடைக்கப்பட்டு , பணியாளர்களின் இரண்டே கால் பவுண் நகைகள் மற்றும் 55 ஆயிரத்து 500 ரூபாய் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பணியாளர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.