வன்னமடுவ பகுதியில் சுற்றித் திரிந்த ”அக்போ” என்ற யானையை தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யானை தாக்கப்பட்டமை தொடர்பில் யானைகள் பாதுகாப்பு அமைப்பினர் திறப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து , நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.