உலகின் முதல் நிலை பணக்காரரான பிரபல அமெரிக்க வர்த்தகர் எலோன் மஸ்க்(elon musk) அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது Starlink செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை தொடங்குவதற்கே எலோன் மஸ்க் இலங்கை வரவுள்ளார்.
இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அனுமதி
இந்த இணைய வசதிகளை இலங்கையில் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இணைய சேவை
Starlink செயல்பாடுகளுக்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தற்போது வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, எலோன் மஸ்க்கின் இலங்கை விஜயம் ஓகஸ்ட் மாதம் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.