கத்தாரில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு கிடைக்காததால் நாடு திரும்பிய நபர்கள்
சம்பவத்தில் ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண் கத்தாரில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று நபர்களிடமிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று அவர்களை கத்தார் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், கத்தார் நாட்டுக்குச் சென்ற மூவரும் அங்கு வேலைவாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் நாடு திரும்பியுள்ளதோடு இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்கு முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைதான சந்தேக நபரை வெலிசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.