ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் கடுகன்னாவ பரகடவெல்ல பிரிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.
காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய மாணவன்
நேற்று (23) காலை தனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் ம்ாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
மாணவன் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடபிலான விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.