முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாவாக குறைக்க முடியும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
“முட்டை விலை 6ரூபாயினால் குறைந்துள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் அதிகாரசபையின் அறிக்கைகளையும் பெற்று வருகின்றேன். தொடர்ந்து சோதனை செய்து வருகிறோம்.
40 ரூபாய்க்கு கூட முட்டை விற்பனை செய்ய முடியாவிட்டால் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் பண்டிகை காலம் டிசம்பரில் தொடங்கும்.