புதிய சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தனது 81 வயதில் காலமாகியுள்ளார்
விக்கிரமபாகு கருணாரத்ன, இடதுசாரி அரசியலுக்காகத் தன் இன்னுயிரை தியாகம் செய்து, மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் தன் கொள்கைகளுக்காக நின்று போராடிய தலைவர் ஆவார்.
இவர் தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்துவந்தவர்களில் ஒருவர்.
கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார்.
அத்துடன் இன பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறிவந்திருந்திருந்தார்.
மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான நம்பிக்கை, இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விக்கிரமபாகு நீண்டகாலம் சுகவீனமுற்றிருந்த நிலையில் காலமாகியுள்ளார் அவரின் மறைவையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.