பாலஸ்தீனர்கள்மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட ஏழு இஸ்ரேலியர்கள்மீது ஆஸ்திரேலியா பொருளாதாரம் மற்றும் பயணத் தடைகளை விதித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்துக்கு முரணானது எனவும், மத்திய கிழக்கில் நீடித்த அமைதிக்கு அது தடையாக இருக்கும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவேதான் மேற்குக் கரையில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக குடியேற்ற வன்முறை, தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மேற்படி நபர்களுக்கு எதிராக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான வன்முறைச் செயல்களில் ஈடுபடும் தரப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.