வடகொரியாவில்(north korea) கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைக் கருத்தில் கொண்டு வடகொரியத் தலைவர் கிங் ஜாங்-உன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமையன்று பெய்த கனமழையால் வட கொரிய-சீன எல்லையில் உள்ள ஒரு நதி ஆபத்தான அளவைத் தாண்டியதுடன் “கடுமையான நெருக்கடியை” உருவாக்கியது என்று அதிகாரபூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகொரிய தலைவரின் வாகன அணிவகுப்பு
வடகொரிய தலைவரின் வாகன அணிவகுப்பு வெள்ளம் சூழ்ந்த சாலையில் பயணிப்பதைக் காட்டும் புகைப்படத்தையும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
சினுஜு மற்றும் உய்ஜு பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட 5,000 க்கும் மேற்பட்ட மக்கள், ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் விமானங்கள் மற்றும் பிற வெளியேற்றப் பணிகளில் மீட்கப்பட்டதாக அரச ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன.