கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைவனத்தில் 35 மைல் நீள விரிசலை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
இதனால் பெரும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிளவு காரணமாக ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பாலைவனம் செங்கடல் அருகே ஆப்பிரிக்காவின் கிழக்கே அமைந்துள்ளது.
இந்த பிளவு காரணமாக, துன் கடல் (Thun Sea) ஒரு புதிய கண்டம் என்று கூறப்படுகிறது.
மூன்று பெரிய டெக்டோனிக் தட்டுகளின் இயக்கம் அதிகரித்தால் வலுவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வருங்காலத்தில் மூன்று தட்டுகளுக்கு இடையே உள்ள தூரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக ஆப்பிரிக்கா உடைந்து புதிய கண்டம் உருவாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் சிலர் இது உலக அழிவின் முதல் அறிகுறியாக கூட இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.