திருமணம் பற்றிய சர்ச்சைகளுக்கு நடிகை மீனா தரமான பதிலடிக் கொடுத்துள்ளார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக கலக்கியவர் தான் நடிகை மீனா.
இவர் “என் ராசாவின் மனசிலே” என்ற படத்தில் தான் நடிகையாக அறிப்பட்டார்.
இதனை தொடர்ந்து கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார்.
இதனிடையே நடிகை மீனா, வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.
இப்படி இருக்கையில், சில வருடங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் உயிரிழந்தார். கணவரின் இழப்பு மீனாவை ரொம்பவே பாதித்தது.
சர்ச்சைகளுக்கு பதிலடி
இந்த நிலையில் மீனா அரசியல் தலைவர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் சமீபக் காலமாக தகவல் வெளியாகி வந்தது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், “நான் ஒரு நிலையான உள் போராட்டத்தை அனுபவித்துவருகிறேன். மிகவும் வலியை உணர்கிறேன்.
மாறாக நீங்கள் என்னை பார்க்கும்போது நன்றாக இருப்பது போல் தோன்றும். முகமூடியின் பின்னால் மறைத்து வைத்திருக்கிறேன். வெறுப்பவர்கள் வெறுப்பவர்களாகவே இருப்பார்கள். முட்டாள்கள் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்” என பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் மீனாவின் பதிலடியை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார். அவரின் ரசிகர்கள் மீனாவிற்கு சார்பான கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
View this post on Instagram