ஒருவருக்கு வாஸ்து சாஸ்திரம் சரியாக அமையவில்லை என்றால் வீட்டில் கஷ்டம் வரும் என்று சொல்லப்படுகிறது. அப்படி வீட்டில் சிலர் குபேரர் சிலையை வைத்திருப்பார்கள். அந்த சிலையை வாஸ்து படி வீட்டில் குபேரர் சிலையை எங்கு வைத்தால் என்ன பயன் என இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.
சிரிக்கும் புத்தர் என்று சொல்லக்கூடிய குபேரர் சிலை மகிழ்ச்சியின் சின்னமாக அறியப்படுகிறது. குண்டான கன்னங்களுடன் சிரிக்கும் புத்தர் சிலைகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை. வீட்டில் வைக்கப்படும் சிரிக்கும் புத்தர் சிலைகள் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாக நம்பப்படுகிறது.
வீட்டில் குபேரர் சிலைகள் இருந்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். குபேரர் எப்போதும் பண மூட்டையுடன் தான் இருப்பார். பணத்தின் அதிபதியாக தான் குபேரர் கருதப்படுகிறார். இதனால் இதை வீட்டில் வைப்பதன் மூலம் செல்வம் செழிக்கும் என்று நம்பப்படுகிறது.
குபேரர் சிலையை சிறிது நேரம் பார்த்தால் நம்மையும் அறியாமல் முகத்தில் சிரிப்பு வரும். இது ஒரு நேர்மறையான புன்னகை. அந்த நேர்மறையில்தான் உண்மையான அதிர்ஷ்டம் இருக்கிறது. அதனால்தான் குபேரர் சிலைக்கு இன்னும் அதிக தேவை உள்ளது.
எந்த இடத்தில் வைப்பது நல்லது?
குபேரர் சிலையை நீங்கள் எழுந்ததும் பார்த்தால் அந்த நாள் அதிர்ஷ்ட நாளாக அமையுமாம். அதனால் வீட்டின் கதவுக்கு அருகில் வைப்பது வாஸ்து படி சிறந்ததாகும். இதனால் வீட்டிற்குள் நுழைந்தவுடனும் பார்க்கலாம், வெளியே புறப்படும் போதும் பார்க்க முடியும்.
இந்த சிலையை கண்ட இடத்தில் வைப்பது நல்லதல்ல. கண்ணில் படும் இடத்தில் தான் வைக்க வேண்டுமாம். குறிப்பாக தரையில் வைக்க கூடாது என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதே போன்று இருண்ட இடத்திலும் வைக்க கூடாதாம்.
சிலர் டிவி, பிரிட்ஜ் மீது சிலையை அழகு பொருளாக வைப்பார்கள். அது போன்று வைகக்கூடாதாம். அதே போன்று காலணிகள் இருக்கும் இடங்களிலும் வைக்க கூடாதாம்.