மத்திய கிழக்கு நாடான துருக்கி இன்ஸ்டாகிராமை தடை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
துருக்கிய அரசாங்கம் இன்ஸ்டாகிராமை முடக்கியுள்ளதாகவும் ஆனால், இந்த தடை குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கியில் இன்ஸ்டாகிராமிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக 5 கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியின் மொத்த மக்கள் தொகை சுமார் 8.5 கோடி ஆகும். அதேவேளை துருக்கிய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துகின்றதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.