யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று ( 4 ) மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்நிலையில் ஓகஸ்ட் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு பூங்காவனமும், ஓகஸ்ட் 14 ஆம் திகதி புதன்கிழமை 11 ஆம் திருவிழாவான கைலாசவாகனத் திருவிழாவும் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சப்பரத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
19ஆம் திகதி தேர்த்திருவிழா
தொடர்ந்து 19ஆம் திகதி ஞாயிற்றுக்கழமை காலை 8 மணிக்கு தேர்த்திருவிழாவும், 19 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு ஆவணி மாதம் பூரணை தினத்தில் தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது
சன்னதியான் ஆலயத்தில் அன்று மாலை 6.30 மணியளவில் மௌன திருவிழா நடைபெறும். 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொண்டர் பூசைவிழா நடைபெற்று வருடாந்த மஹோற்சவம் நிறைவடையவுள்ளது.
அதேவேளை இலங்கையில் வாய்கட்டி பூசை செய்யும் ஆலயங்களுள் கதிகாம கந்தன் ஆலயமும், செல்வச்சன்னதியான் ஆலயமும் , மண்டூர் கந்தசுவாமி ஆலயமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.