கிளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட 10 சந்தேக நபர்களும் பலத்த பாதுகாப்புடன் கடுவலை நீதவான் நீதிமன்றில் இன்று (05) ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்தனர்.
பெண் உட்பட 10 பேர் கைது
இந்த சம்பவத்தில் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கிளப் வசந்தவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.