ஹெபடைடிஸ்” என்பது கல்லீரலில் ஏற்படும் ஒரு வகை வீக்கமாகும்.
கல்லீரல் உடலில் இருப்பதால் நச்சுத்தன்மை, புரத தொகுப்பு மற்றும் செரிமானம் உள்ளிட்ட பல வேலைகளை செய்கிறது. இந்த உறுப்பில் ஏதாவது கோளாறுகள் ஏற்படுமாயின் அதன் பக்கவிளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
குறிப்பிட்ட சில வைரஸ் தொற்றுகளின் தாக்கம், மது அருந்துதல், சில மருந்துகள், நச்சுகள் மற்றும் தன்னுடல் தாக்கக் கோளாறுகள் உள்ளிட்ட காரணிகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம்.
அதே சமயம், மஞ்சள் காமாலை அல்லது வயிற்று வலி போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து அருந்துபவர்களுக்கு இரவில் வேறு சில உபாதைகள் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக மருந்தின் தாக்கங்கள் பாதங்களில் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தும். இதுவே ஹெபடைடிஸ் எனப்படுகிறது.
அந்த வகையில் கல்லீரல் பாதிப்பை உறுதிச் செய்யும் இரவு நேர எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கல்லீரல் பாதிப்பை உறுதிப்படுத்தும் அறிகுறிகள்
1. கல்லீரல் செயல்பாட்டில் பிரச்சினைகள் ஏற்படும் பொழுது அது கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். ஹெபடைடிஸ் உடலில் உள்ள திரவத்தை ஒழுங்குப்படுத்தும் கல்லீரலின் திறனை பாதிக்கிறது. இரவில் தொடர்ந்து கால்களில் வீக்கத்தை கவனித்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது சிறந்தது.
2. ஹெபடைடிஸ் பாதம் மற்றும் கால்களில் வீக்கத்துடன் சேர்த்து வலியையும் ஏற்படுத்தும். இந்த வலி குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரம் இருக்கலாம். அல்லது தொடர்ந்தும் வரலாம்.
3. தோல் மாற்றங்கள், நிறமாற்றம் அல்லது கால்கள் மற்றும் பாதங்களில் அசாதாரண மாற்றங்கள் அவதானித்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும். ஏனெனின் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும் போது இப்படியான பிரச்சினைகள் ஏற்படக் கூடும். கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்ட ஒருவருக்கு அவரின் சருமம் கருமையாதல் அல்லது மஞ்சள் நிறமாதலை அவதானிக்கலாம்.
4. நடுராத்தியில் அடிக்கடி கால் பிடிப்புகள் அல்லது தசைப்பிடிப்புகள் ஏற்பட்டால் இதுவும் கல்லீரல் பாதிப்புகளில் ஒன்றாக பாரக்்கலாம். ஹெபடைடிஸ் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பாதிக்கும் போது தசைப்பிடிப்பு ஏற்படும்.