பொதுவாக இன்று பலரும் சந்திக்க பிரச்சினைகளில் தலைமுடி உதிர்வும் ஒன்று.
சிலர் தலைமுடி உதிர்வை கட்டுபடுத்துவதற்காக எவ்வளவு முயற்சி செய்தாலும் பலன் இல்லாமல் தவிப்பார்கள்.
இன்னும் சிலர் கடைகளில் பல்வேறு எண்ணெய்களை வாங்கி தடவுவார்கள். இவை சில சமயங்களில் தீர்வு தராமல் கூட போகலாம்.
தலைமுடி உதிர்வு பல காரணங்களால் ஏற்படலாம். காரணத்தை கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்தால் தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.
அந்த வகையில், தலைமுடி உதிர்வு அதிகமாக இருப்பவர்கள் கறிவேப்பிலையில் ஜீஸ் செய்து குடிக்கலாம்.
இது தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
அப்படியாயின் தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தும் கறிவேப்பிலை ஜீஸ் எப்படி தயாரிப்பது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – 1 கட்டு
சீரகம் – 1/4 டீஸ்பூன்
தயிர் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
எலுமிச்சை சாறு – 2 சிட்டிகை
செய்முறை
முதலில் கறிவேப்பிலையை குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.
அதனுடன் சீரகம், தயிர், உப்பு போன்றவைகளையும் சேர்த்து கொள்ளவும்.
அரைத்த கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
கறிவேப்பிலை ஜூஸ் இப்படி குடிக்கும் போது கசப்பு தெரியாது.